வியாபாரத்தில் ஈடுபட்ட சிறுவன் : கல்வியை தொடர விஜயகலா நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில், உடுவில் – சண்டிலிப்பாய் வீதிப் பகுதியில் 13 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவன் ஒருவன், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து, வீதியில் பழங்கள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில், குறித்த மாணவன் கல்வியை தொடர, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.


அந்த வீதியில் பயணம் செய்த அமைச்சர், மாணவனை வினவியதுடன், உடனடியாக அவனுடைய பெற்றோரை அழைத்து, பாடசாலை மாணவர்கள் வீதியிலோ அல்லது வேறு வியாபாரம் செய்வதற்கு தடை எனவும், எனவே நீங்கள் இந்த விடயத்தில் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும், பிரச்சினை இருப்பின் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, பாடசாலை மாணவர்கள் எவரும், வீதியிலோ வியாபார நடவடிக்கையில் ஈடுபட முடியாது எனவும் தெரிவித்த, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாணவனை உடனடியாகவே வீட்டுக்கு அனுப்பி வைத்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!