சூதாட்டத்தில் ஈடுபட்ட  ஆறு பேர் பொலிசாரினால் கைது!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மட்டக்களப்பு தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் தயாள் தீகா வதுறவின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 7 ,52,270 ரூபா பெருமதியான பணமும் சூதாட்டத்திற்கு பாவிக்கப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்டத்தாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை, கல்முனை, ஆறையம்பதி, கல்லாறு, சாய்ந்தமருது, மட்டக்களப்பு புதூர் ஆகிய பபிரதேசங்களை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒருவர் தப்பி சென்றுள்ளதாகவும், தப்பி சென்றவரின் கையடக்க தொலைப்பேசி பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தப்பி சென்றவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்காக நாளை மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் தயாள் தீகா வதுற தெரிவித்தார். (MA)

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!