விமல் – திஸ்ஸ விதாரண சந்திப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவிற்கும், லங்கா சம சமாய கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவிற்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பில் தேசிய சுதந்திர முன்னணி அலுவலத்தில் நடைபெற்றது.

நாட்டின் தற்போதைய நிலமை மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக, இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச….

நாட்டின் தற்போதய நிலை தொடர்பில் இரண்டு கட்சிகளும் சந்தித்து பேசுவது சிறந்ததாக அமையும் என பேராசிரியர் திஸ்ஸவிதாரண கேட்டிருந்தார்.

அதற்கு அமைய எமது கட்சியின் உறுப்பினர்களும், லங்கா சமசமாச கட்சியின் உறுப்பினர்களும் சந்தித்து பேசியிருக்கின்றோம்.

குறிப்பாக அமெரிக்காவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள அக்சா உடன்படிக்கை தொடர்பாகவும் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள மிலேனியம் சலன்ஞ் கோப்றேசன் இணக்கப்பாடு எட்டப்பட்டால் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில்தான் அதிகளவில் பேசினாhம்.

ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் நாம் அனைவரும் ஒரே கொள்கையின் கீழ் இருக்கின்றோம்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு விரோதமான அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்துடன் இருக்கின்றோம்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை தோல்வி அடைய செய்து எமது பக்க வேட்பாளரை வெற்றிய அடைய செய்ய வேண்டும்.

இந்த நிலைப்பாட்டில் இடதுசாரி கட்சிகள், தமிழ் கட்சிகள், முஸ்லீம் கட்சிகளும் எம்முடன் இருக்கின்றார்கள்.
ஆகவே எமது வேட்பாளர் நிச்சயமாக வெற்றியடைவார். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!