வேட்பாளர் தெரிவில் தாமதம் ஏன்? : சமீர

கோட்டபாய ராஜபக்ச வெல்வதற்குரிய பாதையை அமைத்த பின்னர், தமது கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் நிலைப்பாட்டை, ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களில் சிலர் கொண்டிருக்கின்றனர் என, தேசிய மக்கள் சபையை சேர்ந்த சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியினர் தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில், நாளை அல்லது நாளை மறுதினம் என்று தினம் தோறும் சொல்லி பின்னோக்கி றிவேஸ் கியரில் செல்வது ஏன் என்ற சந்தேகம் எமக்கு எழுந்திருக்கின்றது.

இது தொடர்பில் ஊடகங்களுக்குள்ளும் பல்வேறு செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாயவிற்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது.

அதாவது கோட்டபாய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்து கோட்டபாய ஜனாதிபதியாகியன் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும், கொழும்பு ரெலிக்கிறாவ் எனும் ஊடகத்தில் செய்தி வெளியாகி இருக்கின்றது.
தெளிவாக நீண்ட செய்தியினை அது வெளியிட்டிருக்கின்றது.

இது ஒரு பாரிய குற்றச்சாட்டு இந்த குற்றச்சாட்டு தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களோ, அமைச்சர்களோ யாரும் கவலை கொள்ளவும் இல்லை எதிப்பினை வெளியிடவும் இல்லை.

எனவேதான் ஐக்கிய தேசிய கட்சி தமது வேட்பாளரை அறிவிப்பதில் பின்னடிப்பது தொடர்பில், எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

தமக்கு வேண்டிய ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அந்த கட்சியில் பிரபல்யம் வாய்ந்த முக்கியஸ்தர்களுக்கு இருக்கின்றார்கள்.

மக்கள் விரும்புவர் அல்லாது மக்கள் எதிர்பார்கின்றவர் அல்லாத ஒருவரை நியமிப்பதற்கு மக்களால் ஒதுக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர் சிலர் முயற்சிக்கின்றார்கள்.

இவர்களின் எண்ணம் முடிவடைவது கோட்டபாய வெல்வதற்குரிய பாதையை அமைத்ததன் பின்னர்தான். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!