மட்டக்களப்பில், பீடாதிபதிகளுக்கான இரண்டு நாள் செயலமர்வு

தேசிய கல்விக் கல்லூரி பீடாதிபதிகளுக்கும், கல்விக்கும் தரமேம்பாட்டுக்கான உப பீடாதிபதிகளுக்குமான இரண்டு நாள் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.


2016, 2017 ஆம் ஆண்டுகளில் கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களை ஆசிரியர் பயிலுனர்களாக உள்வாங்குவது தொடர்பாக தேசிய கல்விக் கல்லூரி பீடாதிபதிகளுக்கும், கல்விக்கும் தரமேம்பாட்டுக்கான உப பீடாதிபதிகளுக்கான முன் திட்டமிடல் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 2016, 2017 ஆம் ஆண்டுகளில் உயர் தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களை ஆசிரியர் பயிலுனர்களுக்காக உள்வாங்குவதற்காக 18 நாட்கள் நடைபெறவுள்ள பயிற்சி செயலமர்வுக்காக இலங்கையின் 19 தேசிய கல்விக் கல்லூரி பீடாதிபதிகள் கலந்துகொண்ட திசைமுகப்படுத்தலை திட்டமிடுவதற்கான செயலமர்வு கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான உதவி பணிப்பாளர் என்.பீ.நஜுமுதீன் ஒழுங்கமைப்பில் கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பணிப்பாளர் புஷ்ப குமார கலகே தலைமையில் மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக் கல்லூரியில் நடைபெறுகின்றது.

இரண்டு நாட்கள் மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக்கல்லூரியில் நடைபெறுகின்ற செயலமர்வு தொடர்பாக மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரி பீடாதிபதி கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!