திருமலையில் ஆரம்பமான, கிழக்கு மாகாண உள்ளூர் அபிவிருத்தி திட்டம் !

கிழக்கு மாகாண உள்ளுர் அபிவிருத்தி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, இந்து கலாசார மண்டபத்தில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.


உலக வங்கியும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றிணைந்து, இலங்கையில் 4 மாகாணங்களில் அபிவிருத்து வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.
இலங்கையில், வட மத்திய மாகாணம், ஊவா மாகாணம், வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியவற்றில், அபிவிருத்தியை மேற்கொண்டு வருவதாக, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபே குணவர்த்தன தெரிவித்தார்.

கிழக்கு மாகாணங்களில் இயங்குகின்ற, 45 உள்ளூராட்சி மன்றங்களுடைய சேவை வழங்கும் திறனை விருத்தி செய்து, அதனூடாக மக்களுக்கு உயரிய சேவை வழங்கக் கூடிய இயல்பு நிலையை உருவாக்குவதற்காக, இந்த செயற்திட்டம் அமையப் பெற்றுள்ளது.

இந் நிகழ்வில், உலக வங்கியின் செயலணி தலைவி யரிசா லிங்டோ சோமர், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பப்ரி சோ, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபே குணவர்த்தன, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.ஆசீஸ், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், திருகோணமலை நகர சபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், அமைச்சுக்களின் செயலாளர் என பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!