முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் மீண்டும் பதிவியேற்பு

இராஜாங்க அமைச்சர் பதவிகளில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மொஹமட் காசிம் மொஹமட் பைஸால் மற்றும் அலி சாஹிர் மௌலானா செயிட் ஆகியோர், இன்று மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்தனர்.


அதற்கமைய, மொஹமட் காசிம் மொஹமட் பைஸால், சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சராக, ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அத்துடன், அலி சாஹிர் மௌலானா செயிட், ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!