மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி திருமுருகன் வீதிபுனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.
இவ்வீதியை புனரமைப்பு செய்வதற்கான அங்குராப்பண நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ், மண்முனை தென் எருவில்பற்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் ரி.வரதராஜா ஆகியோர் கலந்துகொண்டு வீதிப்புனரமைப்பு பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
பிரதேச சபை உறுப்பினர் வினோராஜ் விடுத்த வேண்டுகோளுக்கமைய பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் 20 இலட்சம் ரூபாவினை இவ் வீதிப்புனரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(சி)