புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – யாழ் மாநகர முதல்வர்

யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டிற்கும், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆலோசகர் அமி ஓ பிரையனுக்குமிடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் அலுவலகத்தில் இன்றைய தினம் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்பின் போது அரசின் செயற்பாடுகள் மற்றும் மக்களின் நிலை தொடர்பில் உயர்ஸ்தானிகர் முதல்வரிடம் வினவியுள்ளார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஆட்சி 2015 ஆட்சி மாற்றம் அதன் பின்னரான காணி விடுவிப்புக்கள் தொடர்பிலும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அரசின் சாதக பாதக நிலைமைகள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்.

புதிய அரசியலமைக்கு உருவாக்குவதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட வகையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள், விசேட திட்டங்கள், யாழ் நகர் அபிவிருத்தி, யாழ் மாநகர திண்மக்கழிவகற்றல் செயற்றிட்டம், மாநகரசபையின் புதிய கட்டடத்திற்கான வேலைத்திட்டங்கள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்;டுவரும் நடவக்கைகள் தொடர்பிலும், இந்திய அரசின் நிதி உதவியில் அமைக்கப்பட்டுவரும் கலாசார மண்டபம் தொடர்பிலும் உயர்ஸ்தானிகரிடம் முதல்வர் எடுத்துக்கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது அது தொடர்பில் மக்கள் விரும்பும் வேட்பாளரை ஆராய்ந்து, தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான அரசியல் தீர்வை அடையும் வண்ணம் கட்சி தலைமைப்பீடம் ஆதரவை வழங்கும் என யாழ் மாநகர முதல்வர் கூறியுள்ளார்.

குறித்த சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரரிப்பு என்பது தொடர்பில், கூட்டமைப்பு சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆலோசகரிடம் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

நாட்டிற்கு சிறந்த அரசியலமைப்பு ஒன்றே மிக இன்றியமையாதது என்றும், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டுமானால் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!