கிளிநொச்சி பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியை விடுவிக்க கோரி பளை மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி சிவரூபனை விடுவிக்கக்கோரி பளை பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை பத்துமணியளவில் பளைப் பிரதேச வைத்திய சாலைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபவனியாக பிரதேச செயலகம் வரை சென்று ஜனாதிபதிக்கான கோரிக்கை மகஜர் பிரதேச செயலக அதிகாரியிம் கையளிக்கப்பட்டது.
‘விடுதலை செய் வைத்தியரை விடுதலை செய்’, ‘நிறுத்து நிறுத்து சட்டத்தின் முன் நிறுத்து’, ‘நீக்கு நீக்கு பயங்கரவாத சட்டத்தி நீக்கு’ என்ற பல்வேறு கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பியிருந்தனர்.
அத்துடன் வைத்தியரை சட்டத்தின் முன் நிறுத்தாத பட்டசத்தில் பாரியளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் பளை மக்கள், அரசியல்வாதிகள் என பலர் கலந்து கொண்டனர்.(நி)