வவுனியாவிலிருந்து வேல்தாங்கிய பாத யாத்திரை ஆரம்பம்!(காணொளி இணைப்பு)

வவுனியாவிலிருந்து, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு, வருடா வருடம் மேற்கொள்ளப்பட்டு வரும் வேல்தாங்கிய பாத யாத்திரை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து, சாமி அம்மா தலைமையில் இப்பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாத யாத்திரை இவ்வருடத்துடன் 9ஆவது தடவையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா வேப்பங்குளத்தில் இருந்து ஏ-9 வீதியால் செல்லும் குறித்த பாத யாத்திரை, வீதியிலுள்ள ஆலயங்களில் தரித்து நின்று செல்லவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்தினத்தன்று நல்லூர் திருத்தலத்தை வந்தடையவுள்ளது.

இதேவேளை, பிரதான வீதிகளிலுள்ள ஆலயத்தின் நிர்வாக சபையினர், வேல்தாங்கிய பாத யாத்திரையில் கலந்துகொள்ளும் அடியார்கள், தமது ஆலயங்களில் தங்கியிருக்கும் தினத்தில், அவர்களுக்குத் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!