சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் இலங்கை வருகின்றார்!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரான ஸஸங்க் மனோகர் இன்று இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இன்று இரவு 11 மணியளவில் இலங்கை வரும் ஐசிசி தலைவர் மனோகர் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஹோமகவில் புதிதாக அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும், இலங்கைகக் கிரிக்கெட் நிர்வாகம் குறித்து கலந்துரையாடவும், கிரிக்கெட் போட்டிகளின் தொலைக்காட்சி உரிமங்கள் விற்பனைக் குறித்த விடயத்தில் கையாள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஐசிசி தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!