ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமரின் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்குமாறு பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சிற்காக இராஜகிரிய பிரதேசத்தில் கட்டடமொன்று வாடகைக்கு பெறப்பட்ட சந்தர்ப்பத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குறித்த முறைப்பாட்டுடன் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(நி)