ஹொங்கொங்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்வதற்காக, கல்லூரி வகுப்புகளை இரு வாரங்களுக்கு புறக்கணிக்க மாணவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர் குழு தலைவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
கல்லூரிகளில் புதிய பருவ வகுப்புகள் அடுத்த மாதம் 2-ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும், எனினும், ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களில் பங்கேற்கவும், தங்களது கோரிக்கைகளை ஏற்க ஹொங்கொங் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலும் அந்த வகுப்பைகளைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் 13-ஆம் திகதி வரை தங்களது புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.
எங்களது ஐந்து கோரிக்கைகள் தொடர்பாக உரிய பதிலளிக்க ஹொங்கொங் அரசு தவறினால், வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை நீடிப்பது பற்றி பரிசீலிப்போம் எனவும் மாணவர் குழு தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.(நி)