ஜனாதிபதியை சந்திக்கின்றது கூட்டமைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் திணைக்களங்களின் வசமுள்ள உள்ள நில விடுவிப்பு தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று மாலை முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.

மாலை 6.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணி விடுவிப்புடன் தொடர்புடைய விடயதானங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சின் கீழ் உள்ளடங்குகின்றன.

இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இன்றைய சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கூட்டமைப்புடன் ஜனாதிபதி கலந்துரையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!