யாழ். நல்லூரில் எழுக தமிழ்-2019 பரப்புரை!

யாழ்ப்பாணம் நல்லூரில், எழுக தமிழ் 2019 பரப்புரை, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும், வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான சீ.வி.விக்கினேஸ்வரனால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பரப்புரைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆலய முன்றலில் எழுக தமிழ் நிகழ்வுக்கான பரப்புரைகளை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இவ் ஆரம்ப நிகழ்வில், ஈ.பீ.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!