வவுனியாவில் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன!

வவுனியா மாவட்ட செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, நேற்றையதினம் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய, 1997 ஆம் ஆண்டு மகா வித்தியன்ஸ்களான நடராஜா செல்வகுமார், கி.குறூஸ்,
ஞா.ஜினேஸ் ஆகியோரின் நிதி உதவியில், வசதியற்ற வறிய 50 மாணவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு, வவுனியா மாவட்ட செயல கேட்போர் கூடத்தில், அரசாங்க அதிபர் அதிபர் ஜ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

இதற்கமைய, வவுனியா மாவட்ட செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட, 10 வசதியற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும், 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், 20 மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டுள்ளன.

நிகழ்வில், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஏ.பாலகுமார், பிரதம உள்ளக கணக்காய்வாளர் எம்.சிவகுமாரி, மாவட்ட சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெ.ஜெயக்கெனடி, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உ.லதா, பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.சுபாசினி, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!