அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச மண்டானை கிராமத்தில் வாழ்வாதாரத்தினுடாக வறட்சியான காலத்திற்கேற்ற பயிர்களை வளர்க்கும் செயற்றிட்ட கருத்தரங்கு கிராமத்தின் பல்தேவை கட்டடத்தில் நேற்று நடைபெற்றது.
கருத்தரங்கின் விரிவுரையாளராக கிறீன்-லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் கலந்து கொண்டார். இச் செயற்றிட்டமானது தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள், சமூகமேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசனின் சிந்தனைக்கு அமைவாக அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஜெயாகர் தலமையில் திருக்கோவில் பிரதேசத்தில் மேற் கொள்ளப்பட்டது.
கற்றாளை, முருங்கை, மரமுந்திரிகை போன்ற பயிர்களை எவ்வாறு வறட்சிகாலங்களில வெற்றிகரமாக பயிரிடலாம் அவற்றை எவ் வழிகளினுடாக சந்தைப்படுத்தி வாழ்வாதாரத்தினை உயர்த்துதல் போன்ற விடையங்கள் கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் பயிரை பயிரிடுவதற்கான ஏற்ற நிலப்பரப்புக்களும் பார்வையிடப்பட்டதுடன் பயிர்செய்கை மேற்கொள்ளுவதற்கான இடத்தின் மண் மற்றும் நீர் பரிசேதனைக்குட்படுத்தப்பட்டதுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக மாதிரிகளும் பெற்றுக் கொள்ளப்பட்டது.
இச்செயற்றிட்டமானது மிக விரைவில் அமுல் படுத்தப்படும் என்றும் இது பலனளித்தால் மக்கள் வறட்சி காலங்களிலும் பொருளாதாரரீதியாக முன்னேற முடியும் எனவும் கிறீன்லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் எமது டான் ரீவிக்கு தெரிவித்தார்.(MA)