மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச அபிவிருத்தி நிறுவனம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள கொத்தியாபுல கிராமத்திற்க்கும் மற்றும் மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கும் சுத்தமான குடி நீர் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜயில் பவுண்ட் நியுசிலாந்து நிதி அனுசரணையில் நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அதிகார சபையுடன் வவுணதீவு பிரதேச அபிவிருத்தி நிறுவனம் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலை திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
2019 ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் உள்ள 30 பாடசாலைகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கல் மற்றும் மலசல கூடங்கள் அமைத்தல் மற்றும் கொத்தியாபுல கிராமத்திற்க்கான குடிநீர் வழங்கல் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.புண்ணியமூர்த்தி, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மண்முனை மேற்கு கல்வி வலய பணிப்பாளர் ஆர்.ரவிக்குமார், கல்வித் திணைக்கள மாவட்ட பொறியியளாளர் எ.எம்.எம்.ஹக்கீம், வவுணதீவு நீர் வழங்கல் வடிகால் அதிகார சபையின் வவுணதீவு பிரதேச பொறியிளாளர் எம்.தேவேந்திரன், வவுணதீவு பிரதேச அபிவிருத்தி நிறுவன திட்ட இணைப்பாளர் சரத் சந்திரன் வவுணதீவு பிரதேச அபிவிருத்தி நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி பி.பிரகாஸ், வவுணதீவு பிரதேச அபிவிருத்தி நிறுவன திட்ட முகாமையாளர் நிலக்சி தவராஜா, நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் டேவிட் பிரசாத் இவாணி மற்றும் மாவட்ட செயலக அனர்த்த திணைக்கள அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் பொதுசுகாதார உத்தியோகத்தர்கள் உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.(நி)