அம்பாறையில் கலாசார அதிகார சபையின் கூட்டம்

அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தின் பிரதேச கலாசார அதிகார சபையின் கூட்டம் நேற்று பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த மூத்த கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு கலாசார அதிகாரசபையினால் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய கலை நிகழ்வுகள் பற்றி ஆராயப்பட்டது.

இதற்கமைய ஒவ்வொரு மாதமும் கலைநிகழ்வுகளை நடாத்துவது என தீர்மானிக்கப்ட்டது. செப்டெம்பர் மாதம் குறும்படம் வெளியீடு, ஒக்டோபர் மாதம் கலைநிகழ்வுகள் நவம்பர் மாதம் கவியரங்கு, டிசம்பர் மாதம் பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வது என்றும் கலை நிகழ்வுகள் ஊடாக பிரதேசத்தில் இன நல்லுறவை கட்டியெழுப்புவதுடன் கலைஞர்களை கௌரவிக்கின்ற நிகழ்வுகளையும் நடாத்தவுள்ளதாக, பிரதேச செயலாளர் தெரிவித்தார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!