அம்பாறையில் நுண் கடன் தொடர்பான விழிப்புணர்வு!

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தில் நுண்கடன் வழங்கப்படுவதினால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளும் அதனை குறைப்பதற்கான வழிமுறைகள் எனும் தலைப்பில் நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள், வங்கிகளின் முகாமையாளர்கள்,

உத்தியோகஸ்தர்கள், சமூகநல அமைப்புக்களின் பிரதிநிதிகளை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு நேற்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

உள வள உத்தியோகத்தர் எம்.சீ.பௌமீலா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கலந்துகொண்டு நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.

அத்துடன் கல்முனை வடக்கு பிரதேசத்தில் அளவுக்கு அதிகமாக நுண்கடன்களை வழங்கி மக்களை துன்பத்திற்குள்ளாக்கும் நிறுவனங்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இங்கு மகிழ்சிகரமான வாழ்க்கைக்கு உளவளத்துணை எனும் தலைப்பில் உளவளத்துணை உத்தியோகத்தர் எம்.சீ.பௌமீலாவினால் கருத்துரையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமூர்த்தி முகாமையாளர் கே.இதயராஜ், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.தியாகராஜா, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வசந்தினி யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!