பிரேசில் நாட்டில், அமேசன் காடுகளில் தீ

பிரேசில் நாட்டில், அமேசன் காடுகளில் தீ ஏற்பட்டுள்ள நிலையில், மனாஸ் நகரில் சுற்றுச்சூழல் நெருக்கடி நிலையும், பெரு நகரில் சுற்றுச்சூழல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


அமேசன் காடுகள் 5.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் அதாவது 2.1 மில்லியன் சதுர மைல் பரப்பளவை கொண்ட உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல காடாகும்.

புவி வெப்பமடைதலை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசன் மழை காடுகளில், வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு அதிக முறை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்த ஆண்டு 72 ஆயிரத்து 843 காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், கடந்த ஆண்டை விட இது 83 சத வீதம் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை, 9 ஆயிரத்து 507 புதிய காட்டுத் தீ கண்டறியப்பட்டுள்ளதாக, விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

நாட்டில் பல பகுதிகளில் புகை சூழப்பட்டுள்ள நிலையில், மனாஸ் நகரில் சுற்றுச்சூழல் நெருக்கடி நிலையும், பெரு நகரில் சுற்றுச்சூழல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வறண்ட வானிலையில் காட்டுத் தீ பரவுவது இயல்பான விடயம் என்ற போதிலும், சில விவசாயிகள் பண்ணைகள் அமைப்பதற்காக வேண்டுமென்றே தீ வைத்து, சட்டவிரோதமாக காடுகளை அழித்து வருவதாகவும், பிரேசில் ஜனாதிபதி ஜைர் போல்சோனரோவின் சுற்றுச்சூழல் கொள்கையினால், காட்டுத் தீ ஏற்படுவது அதிகரித்துள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!