சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு : 6 பேர் கைது

நுவரெலியா பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பொகவந்தலாவ மிருக வைத்தியசாலைக்கு அருகாமையில், சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்று இரவு 8.30 மணியளவில், இந்த 6 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக, பொகவந்தலாவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.


கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும், பொகவந்தலாவ செல்வகந்த தோட்டப் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன், பொலிஸார் அவர்களை பிணையில் விடுத்துள்ள நிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!