வவுனியா அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு !

வவுனியா பரசங்குளம் கிராம மக்கள், மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.கனீபாவிடம், மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

வவுனியா வடக்கு பரசங்குளத்தில் உள்ள குளத்தை, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று புனரமைத்ததுடன், அப்பகுதியில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு அதன் கீழான காணிகள் பிரித்து வழங்கப்படும் என, முன்னர் குறிப்பிடப்பட்டது.

மேலும் குறித்த குளம் புனரமைப்பு செய்யப்பட்டு 3 வருடங்கள் கடந்தும், அந்த காணிகள் தமக்கு இன்னும் வழங்கப்படவில்லை எனவும், அப்பகுதியில் முன்னர் கடமையாற்றிய கிராம சேவையாளர் ஒருவர், தனது உறவினர்களுக்கும் தனக்கு தெரிந்தவர்களுக்கும் வெளிப்பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கும், அக்காணிகளை வழங்கியுள்ளார் என்றும் குற்றம் சுமத்தி, நேற்று வவுனியா கச்சேரிக்கு முன்பாக, அப்பகுதி மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பிரதேசத்தை சேர்ந்த ஒரு பகுதி மக்கள், மேற்படி குளத்திற்கு கீழ் உள்ள காணியானது, தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டது எனவும், அதற்குரிய உரிய ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும், இக்காணியில் பல வருடங்களாக தாம் விவசாய செய்கையை மேற்கொண்டு வருவதாகவும், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டனர்.
இதன் போது, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்த கருத்துக்கள் தவறானது என தெரிவித்ததுடன், இதில் எந்த அரச அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்து, இன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபாவிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!