வூசூ குத்துச்சண்டையில், வடக்கு மாகாணத்திற்கு 11 பதக்கங்கள்!

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில், வடக்கு மாகாணத்திற்கு 11 பதக்கங்களை பெற்று, வவுனியா வீர, வீராங்கனைகள் பெருமை சேர்த்துள்ளனர்.


கொழும்பு மகரகமவில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் விளையாட்டு உள்ளக அரங்கில், கடந்த 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெற்ற, தேசிய ரீதியிலான வூசூ குத்துச்சண்டை போட்டியில், வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து கலந்துகொண்ட வவுனியாவைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் 11 பதக்கங்களை பெற்றுள்ளனர்.

தேசிய இளைஞர் விளையாட்டு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்.எதிரிசிங்க தலைமையில் இடம்பெற்ற போட்டியில், நாடளாவிய ரீதியில் இருந்து 500 ற்கு மேற்பட்ட் வீர, வீராங்களைகள் கலந்துகொண்டனர்.

வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவரும், வடக்கு மாகாண வூசூ குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளருமான எஸ்.நந்தகுமார் தலைமையில்;, வவுனியாவை சேர்ந்த வீர, வீராங்கனைகள் தேசிய ரீதியிலான வூசூ குத்துச்சண்டையில் கலந்துகொண்டு, 7 தங்கப்பதக்கங்களையும், ஒரு வெள்ளிப்பதக்கத்தையும், 3 வெண்கலப்பதக்கங்களையும் சுவீகரித்துள்ளனர்.

பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகா வித்திலாயம், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, வவுனியா காமினி மகா வித்தியாலயம், கூமாங்குளம் சித்திவினாயகர் வித்தியாலயம், மடுக்கந்த சிறிதம்மரத்தின வித்தியாலயம், நெடுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தை சேர்ந்த வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

தேசிய ரீதியில் நடைபெற்ற ஒன்பதாவது வூசூ போட்டியில், ‘தாவுலு’ என்ற சீன தற்காப்புக்கலை போட்டியிலும், வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!