குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 60 பெண்கள்!

பணிப் பெண்களாக குவைத் நாட்டிற்கு சென்று, பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான 60 பெண்கள், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.

குவைத் நாட்டின் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 45 பேரும், அந்நாட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பில் இருந்த 15 பேரும் உள்ளடங்குவதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 173 பேர் குவைத் நாட்டின் பாதுகாப்பு முகாங்களில் தங்கியிருப்பதாகவும், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!