கோட்டை பேர வாவியில் பயணிகள் படகுச்சேவை இன்று ஆரம்பம்.

வாகன நெரிசலைத் குறைக்கும் வகையில் கொழும்பு கோட்டேயிலிருந்து யூனியன் பிளேஸ் வரையான பேர வாவியில் பயணிகள் படகு சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்கவின் திட்டத்திற்கு அமைய ஏற்படுத்தப்பட்டுள்ள படகுச்சேவையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை ஆரம்பித்து வைத்துள்ளார்.

குறித்த படகுச் சேவையினை பயணிகள் ஒரு மாத காலம் இலவசமாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு இதனை பயன்படுத்தி 9 முதல் 10 நிமிடங்களுக்கு கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் பகுதிக்குச் செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த படகுச்சேவை தொடர்ந்தும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!