
வசீம் தாஜுதீன் கொலை, லசந்த விக்ரமதுங்க கொலை உள்ளிட்ட 6 சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை, வெவ்வேறு கோப்புகளாக தயாரித்து நாளைய (23) தினத்திற்கு முன்னர் சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஏற்கனவே அறிவித்திருந்தார்.
வசீம் தாஜுதீன் கொலை, லசந்த விக்ரமதுங்க கொலை, கீத் நொயார் கடத்தல், 17 பணியாளர்கள் கொலை மற்றும் 11 இளைஞர்கள் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபரினால் கடந்த 15 ஆம் திகதி பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் குறித்த 6 சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, பதில் பொலிஸ் மா அதிபரால் சட்டமா அதிபரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(சே)