மன்னார் அரச வைத்திய அதிகாரிகளும் பணிப்பகிஸ்கரிப்பு!

மன்னார் மாவட்டத்திலும் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மன்னாரில் உள்ள ஏனைய அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் ஒருநாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வைத்தியசாலையின் வெளிநோயளர் பிரிவுகளில் எவ்வித பணிகளும் இடம்பெறவில்லை.

தூர இடங்களில் இருந்து சிகிச்சைக்கு வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

எனினும் அவசர சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!