தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் வாரம் முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியினரும் அறிவித்து வரும் நிலையில், ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினம் தொடர்பாக இதுவரையில் உத்தியோகபூர்வ திகதி அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும், பிரதித் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் நாளைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது எதிர்வரும் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.(நி)