அமைச்சர்களுக்கு-பிரதமர் அழைப்பு!

அலரிமாளிகையில் நாளை இடம்பெறும் விருந்துபசாரத்திற்கு அமைச்சர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டு 4 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், நாளைய தினம் அலரிமாளிகையில் விருந்துபசாரம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விருந்துபசாரத்தில் பங்கெடுக்குமாறு அமைச்சர்கள் அனைவருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வேட்பாளராக யாரை நிறுத்தப்போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!