நுவரெலியா மாவட்டத்திலும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நுவரெலிய மாவட்டத்திலுள்ள ஹட்டன் டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில், அங்கு நோயாளர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், சிகிச்சைக்காக வருகை தந்த நோயளர்கள் தாதிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
அத்தோடு சில அத்தியாவசிய மருத்துவ தேவைகள் தாதிகளால் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.(நி)