யாழ்.போதனா வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், அரச வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் மருத்துவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தில், யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று காலை 8.00 மணிக்கு முன்னர் சிகிச்சை வழங்கப்பட்ட போதும், காலை 8.00 மணிக்கு பின்னர் சிகிச்சை வழங்குவதில் இருந்து வைத்தியர்கள் விலகி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நெடுந்தீவு, மற்றும் நயினாதீவு போன்ற தீவகப்பகுதிகளில் இருந்தும் மற்றும் பிறதூர பிரதேசங்களில் இருந்து வருகை தந்த நோயாளிகள் உரிய சிகிச்சையினை பெறமுடியாத நிலையில் திரும்பி சென்றனர்.

இதன்போது நோயாளிகளுக்கு புதிய திகதி வழங்கப்பட்டதுடன், வெளிநோயாளர் பிரிவிலும், சிகிச்சைக்காகக் காத்துநின்ற மக்கள், காலை 8.00 மணிக்கு பின்னர் சிகிச்சை பெறமுடியாமல் முரண்பட்டு சென்றதை அவதானிக்க முடிந்தது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!