வைத்தியர்கள் அடையாள வேலை நிறுத்தம்!

வடக்கு கிழக்கில் வைத்தியர்களின் இடமாற்றம் முறையாக நடக்காமை உள்ளிட்ட 6 விடயங்களை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியில் மருத்துவர்கள் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்களினாலேயே இப்போரட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணிவரை வைத்தியர்களின் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, விசேட சிறுநீரக பிரிவின் நடவடிக்கைகள், முப்படை வைத்தியசாலை என்பவற்றில் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படமாட்டது என தெரிவிக்கப்படுகின்றது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!