குருநாகல் மாவட்டம் மாவத்தகம, ரிதிகம மற்றும் கொகரெல்ல பொலிஸ் பிரிவில் நீண்ட காலமாக மோட்டார் சைக்கிள்களைத் திருடிவந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேநபர்களிடம் இருந்து ஐந்து மோட்டார் சைக்கிள்களும் 09 கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் குமார தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் நீண்டகாலமாக மாவத்தகம, ரிதிகம மற்றும் கொகரெல்ல பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிள்களைத் திருடிவந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐந்து மோட்டார் சைக்கிள்களும் கொககெரல்ல பிரதேசத்தில் வட்டிக்காக வைத்துள்ள நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
ஐந்து இலட்சம் பெறுமதியான இந்த மோட்டார் சைக்கிள்களில் நான்கு மோட்டார் சைக்கிள்கள் மாவத்தகம பொலிஸ் பிரிவில் காணாமற் போனதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மற்றைய மோட்டார் சைக்கிள் கொகரெல்ல பொலிஸ் பிரிவில் காணாமற் போனதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(நி)