பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் உயர் நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மாகாண சபைத்தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றில் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கை இன்;றி மாகாண சபைத்தேர்தலை நடத்த முடியுமா? என்பதனை தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கங்கோரல் மனு ஒன்றினை அண்மையில் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் இடை மனுதாரராக இணைந்துகொள்ளுமாறு அனுமதி கோரியே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மனு ஒன்றினை நேற்று தாக்கல் செய்திருந்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், எல்லை நிர்ணய அறிக்கையின்றி, பழைய முறைமைக்கு அமைய மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு சட்ட ரீதியாக அதிகாரம் இல்லை என்ற கட்டளையை பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மாகாண சபை தேர்தல் தொடர்பில் விளக்கங்கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு நாளைய தினம் உயர்நீதிமன்றில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மாகாண சபைத்தேர்தல் குறித்து விவாதம் மேற்கொள்வதற்கான தனிநபர் பிரேரணை ஒன்றையும் சபாநாயகர் கருஜெயசூரியவிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)