சவேந்திர சில்வா நியமனம் : இலங்கைக்கு அமெரிக்கா எச்கரிக்கை

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமையால், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் இலங்கைக்கான முதலீட்டில் பாதிப்பு ஏற்படும் என, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா ஜனாதிபதியால் கடந்த திங்கட்கிழமை நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது நியமனம் குறித்து, நேற்று வொஷிங்டனில் கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரி, குறித்த எச்சரிக்கையை விடுத்தார்.

இராணுவ தளபதி மீது மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்கள் இருப்பதனால், இலங்கையுடன் ஒரு வலுவான இராணுவ உறவை வளர்த்துக் கொள்வது, அமெரிக்காவுக்கு தடையாக இருக்கும்.
அந்நிய முதலீட்டில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

குறிப்பாக இலங்கையின் நகர்ப்புற போக்குவரத்து அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட 480 மில்லியன் அளவான அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையின் மானியமும் பாதிக்கப்படலாம். என அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!