இலங்கை நாட்டில் குற்றாளிகளுக்கு தண்டனை கிடைக்காது : அசாத் சாலி

மக்கள் நினைப்பதும், ஆட்சியாளர்கள் நினைப்பதும் வேறு வேறு என, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘சவேந்திர சில்வாவை ஐக்கிய தேசியக் கட்சியும் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்துதான் இராணுவத் தளபதியாக நியமித்திருக்க வேண்டும்.

ஆனால், இன்று அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச தரப்பினர் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஏன் இவ்வாறான எதிர்ப்புக்கள் வருகின்றன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். குற்றவாளியாக இருந்தால் தண்டனைக் கிடைக்க வேண்டும்.
ஆனால், இலங்கையில் ஒருபோதும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காது.

மக்கள் நினைப்பது ஒன்றாகவும் ஆட்சியாளர்கள் நினைப்பது ஒன்றாகவும்தான் இருக்கின்றன. எனவே, இது தொடர்பாக கதைத்து எந்தப் பலனும் கிடையாது’
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!