நெசவு தொழிலாளிகளுக்கு சறுக்கால் வழங்கிவைப்பு

ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேவின் நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை காரைதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி கிராமத்தில் நெசவு தொழிலை மேற்கொள்ளும் 28 பயனாளிகளுக்கு சறுக்கால் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக முன்றலில் இன்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஜனாப் எம்.லத்தீப், கௌரவ அமைச்சரின் மாவடிப்பள்ளி இணைப்பாளர் ஜனாப். எம்.அஸ்வர் பிரதேச செயலக கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமூக சேவை உத்தியோகத்தர்,கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

இதன் போது, கடந்த வருட இறுதியில் மாவட்ட செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் மேசன், தையல், சலூன், மெக்கானிக் தொழில்களை மேற்கொள்ளும் தெரிவு செய்யப்பட்ட 08 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் விசேட தேவையுடையவர்களுக்கான வாழ்வாதார உதவிக் கொடுப்பனவாக தலா 25,000 ரூபா இரு பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!