கோட்டபாயவின் குடியுரிமை தெடர்பில் அமெரிக்கா விளக்கம் !

கோட்டாவின் குகுடியுரிமை நீக்குவது தொடர்பாக இறுதிகடிதம் கிடைத்துள்ளதாக பாராளுமன்றஉறுப்பினர் லக்ஷ்மான் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

 

கொழும்பு நெலும்மாவத்தையில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராகா களமிறங்குவது தொடர்பில் பலர் இன்று பேசிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாது, அமெரிக்க குடியுரிமை ஒன்றை நீக்கும்போது எவ்வாறான விடையங்கள் கையாளப்படுகின்றது என்று.

குடியுரிமையை நீக்குவதற்கான கடிதம் ஒன்றை வழங்கியதன் பின்னர் அதை நீக்குவது இலகுவான விடயம் அல்ல, அமெரிக்காவின் தூதுவர் கோட்டபாயவின் குடியுரிமை தொடர்பாக பத்திரிகை ஒன்றிக்கு விளக்கம் அளித்துள்ளார், இப்போது அவரை இணையதளங்களின் ஊடாக விமர்சிக்கிறார்கள்.

சரியான நேரத்தில் கோட்டா கடித்தை வெளியிடுவார், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஒருவருக்கு இலங்கையின் குடியுரிமை தேவை ஆனால் அமெரிக்க குடியுரிமை தேவையில்லை, அவருக்கு இலங்கை குடியுரிமை உள்ளதா என்றுதான் பார்க்கவேண்டும், அதைநீதிமன்றம் சொல்லும் அதுவும் சரியாநேரத்தில் நடக்கும்.

கோட்டபாய விற்க்கு குடியுரிமை இல்லை என்றால் யாராக இருந்தாலும் நீதிமன்றம் செல்லுங்கள் அதற்கு முன்னர் உங்கள் வேட்பாளரை அறிமுகம் செய்யுங்கள். என குறிப்பிட்டுள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!