அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு !

பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான 14 பேரையும், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, அம்பாறை கல்முனை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


இதற்கமைய, அவர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு கல்முனை மாவட்ட நீதிபதியும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிபதியுமான பயாஸ் றஸாக் முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது, பல்வேறு சந்தர்ப்பங்களில், குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 14 சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த 14 பேரையும் செப்டம்பர் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

சந்தேக நபர்கள் அனைவரும், காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!