சிறிதரனின் சகோரனின் காணியில் சோதனை : சோதனை இடைநிறுத்தம்

கிளிநொச்சி வட்டக்கச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டிற்கு அண்மித்த பகுதிகளிலுள்ள, அவரது சகோதரனின் காணியில் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணியில், எந்தவித பொருட்களும் மீட்கப்படாத நிலையில், அகழ்வுப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.


ஆறுமுகம் வீதி வட்டக்கச்சியில் உள்ள சிறிதரனின் வீட்டிற்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள அவரது சகோதரனின், 884 மற்றும் 885 ஆகிய இலக்க காணிகளில், ஆயுதங்கள் புதைத்து வைப்பதாக ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜாவின் கட்டளைக்கு அமைவாக, அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.

குறித்த இரு காணிகளிலும் அடையாளப்படுத்தப்பட்ட இரு இடங்களையும், நீதவான் நேரடியாகச் சென்று பார்வையிட்டு, கிராம அலுவலர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.

அகழ்வுப்பணிகளின் போது, கூரை விரிப்பு அதாவது தரப்பாளின் ஒரு பகுதி மாத்திரமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வுப்பணிகளின் போது, அதிகளவான இராணுவத்தினர், பொலிசார், விசேட அதிரடிப்படையினர் அதிகளவானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், அம்பியூலன்ஸ் வாகனமும் சுமார் 6 மணித்தியாலயங்கள் அங்;கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!