நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட, பொகவந்தலாவ குயினா தோட்டபகுதியில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 15 பெண் தொழிலாளர்கள் குளவிகொட்டுக்கு இலக்கான நிலையில், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேயிலையின் அடிவாரத்தில் இருந்த குளவிக்கூடு கலைந்ததன் காரணமாக, தொழிலாளர்கள் குளவிகொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.
குளவிகொட்டுக்கு இலக்கான 15 பேரும் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.(சி)