கோப் குழுவில் முன்னிலையாக 8 அரச நிறுவனங்களை அழைக்கும் ஹந்துன்நெத்தி

எட்டு அரச நிறுவனங்களை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா விமான சேவை நேற்று கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இலங்கை சதொச நிறுவனம் இன்றைய தினம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை மின்சார சபைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் செப்ரெம்பர் 3ம் திகதி இலங்கை கிரிக்கெட் குழுவின் அதிகாரிகளும் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!