காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி வேலைத்திட்டத்தின் காலாண்டு முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளார் எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் மற்றும் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர், திட்டமுகாமையாளர் உட்பட வலய உதவி முகாமையாளார்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கடந்த மூன்று மாதங்களில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சமுர்த்தி வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு அறிக்கைகள் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் முன் வைக்கப்பட்டதுடன் காத்தான்குடியிலுள்ள இரண்டு சமுர்த்தி வங்கிகளின் முன்னேற்ற மீளாய்வு அறிக்கைகளை வலய உதவி முகாமையாளர்கள் முன் வைத்தனர். இக் கூட்டத்தில் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (சி)