புறக்கணிக்கப்படும் யாழ், வடமராட்சி கிழக்கு

வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள 12 கல்வி வலயங்களை 20 கல்வி வலயங்களாக பிரிப்பதற்கான திட்ட தயாரிப்பில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குத் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தபோதும், குறித்த பிரதேசம் புறக்கணிக்கப்பட்டே வரைபு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் தற்போது 12 கல்வி வலயங்கள் கானப்படுகின்றன.

இதனை இலகுவான நிர்வாகம், போதிய நிதியீட்டல் என்னும் பெயரில் 20 கல்வி வலயங்களாக பிரிப்பதற்கான திட்ட முன்மொழிவு ஒன்று மத்திய கல்வி அமைச்சிற்கு முன் வைக்கப்பட்டு அதற்கான திட்டம் தற்போது வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஊடாக மத்திய கல்வி அமைச்சிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தினை 7 கல்வி வலயங்களாகவும், கிளிநொச்சி இரண்டு வலயங்களாகவும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் என்பன 3 கல்வி வலயங்களாகவும் வவுனியா மாவட்டம் 5 கல்வி வலயங்களாகவும் பிரிப்பதற்கு திட்டமிடப்பட்டது.

இவ்வாறு பிரிக்கப்படும் சூழலில் வெலிஓயா மற்றும் கரைத்துரைப்பற்று தனி கல்வி வலயமாகவும், வவுனியா தெற்கு சிங்கள பாடசாலைகள் 20ம் ஓர் தனியான கல்வி வலயமாகவும் பிரிக்கப்படும் அதே நேரம், மன்னார் மாவட்டத்தின் முசலியுடன் நானாட்டானையும் இணைத்து தனியான கல்வி வலயங்கள் என மொத்தம் 20 கல்வி வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ன.

இதில் சங்கானை மற்றும் காரைநகர் கோட்டங்களை உள்ளடக்கி தனியான வலயமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் யாழ்ப்பாண கல்வி வலயத்தின் கோப்பாய் கோட்டமும் வலிகாமத்தின் உடுவில் கோட்டமும் இணைத்து வலிகாமம் வலயம் 11 எனத் தனியானதோர் வலயம் உருவாக்க சிபார்சு செய்யப்பட்டுள்ள போதிலும் குடாநாட்டின் மிகவும் பின்தங்கிய பிரதேசமான வடமராட்சி கிழக்கு தொடர்பில் எந்த கரிசணையும் கொள்ளப்படவில்லை என்ற விமர்சணமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வடமராட்சியின் கீழே உள்ள மருதங்கேணி கோட்டத்தை தனியான கல்வி வலயம் ஆக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என உறுதிகூறப்பட்டது.

இதற்காக மருதங்கேணி கோட்டத்தினையும் கொடிகாமம் கோட்டத்தின் ஒரு சில பாடசாலைகளை மட்டும் உள்வாங்குவதற்கு ஆராயப்படுகின்றது. இதன் பிரகாரம் 21ஆவது வலயமும் முன் வைக்கப்படும் நிலையில் இறுதி ஆய்வுகள் சிபார்சுகளின் பின்னரே அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும்போதே அனுமதிக்கப்படும் கல்வி வலயங்களின் உறுதியான எண்ணிக்கை தெரிய வரும் என அப்போதைய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரும், தற்போதைய ஆளுநரின் செயலாளருமான எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். இருப்பினும் தற்போது அரச இதழிற்காக குறித்த பட்டியல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மருதங்கேணி புறக்கணிக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது என கல்வியளார்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!