அம்பாறை கல்முனையில் கோட்டாவின் பதாகைகள் !

அம்பாறை மாவட்டம் கல்முனையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவின் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து, கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தாமரை மொட்டு இலச்சினையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோரது புகைப்படங்களுடன் குறித்த விளம்பர பதாதைகள் கல்முனை நகர பகுதி எங்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கட்சியின் ஆதரவாளர் அஹமட் புர்ஹானினால், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கல்முனை பகுதிகளில் பரவலாக தொங்கவிடப்பட்டுள்ளன.

இவ்வாறு வெளியிடப்பட்ட இவ்விளம்பர பதாதைகள் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!