யாழ், நல்லூர் கந்தசுவாமி ஆலய பாதுகாப்பு தொடர்பில் விசேட நடவடடிக்கை

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் சிறப்பாக இடம்பெற்றுவரும் நிலையில், ஆலய பாதுகாப்பினை மையப்படுத்தி, கண்காணிப்புக் கமராக்கள் புகுத்தப்பட்ட வாகனம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இந்த கண்காணிப்பு கமராக்களுடன் கூடிய வாகனத்தின் மூலம் சந்தேக நபர்களை எளிதாக இனங்கண்டு கைது செய்ய முடியும் என நடமாடும் கண்காணப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளிலும், நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்;குதல்கயைடுத்து மதத்தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நல்லூர் ஆலய சூழலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் உடற்பரிசோதனையின் பின்னரே ஆலய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!