மன்னாரில் தொடரும் வரட்சி : 18 ஆயிரத்து 704 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் பல பாகங்களில் கடும் மழை பெய்து வருகின்ற பொழுதும்இ மன்னார் மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 18 ஆயிரத்து 704 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


வரட்சியினால் மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மேட்டு நிலப் பயிர் செய்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு சில வாரங்களாக மன்னார் பகுதியில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்ற போதும் மழை கிடைக்கவில்லை.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடும் வறட்சி நிலவி வருகின்றமையால் நீர்நிலைகளில் நீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றது.

இதனால் நானாட்டான்இ மாந்தைஇ மடுப் பிரதேசங்களில் விவசாய குடும்பங்களால் மேற்கொள்ளப்பட்ட மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகள் மற்றும்

வீட்டுத் தோட்டங்கள் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
வரட்சி காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள 104 கிராம அலுவலகப் பிரிவுகளில் 18ஆயிரத்து 704 குடும்பங்களைச் சார்ந்த 63ஆயிரத்து 115 பேர் நேரடியாக பதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் 13ஆயிரத்து 416 குடும்பங்களைச் சார்ந்த 46 ஆயிரத்து 632 பேருக்கு மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவை மூன்று லொறி பௌசர்களிலும்இ ஐந்து டிரக்ரர் பவுசர்களிலும் நாளாந்தம் 7 ஆயிரத்து 101 லீற்றர் குடிநீர் வழங்கி வருவதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இவற்றில் மடுஇ முசலி பிரதேச செயலகப் பிரிவுகளே குடிநீர் பிரச்சினைகளுக்கு அதிகமாக முகம் கொடுத்து வருகின்றன எனவும்இ மடு பிரதேச செயலகப் பிரிவில் 4 ஆயிரத்து 99 குடும்பங்களும்இ முசலிப் பிரதேசத்தில் 3 ஆயிரத்து 723 குடும்பங்களும் குடிநீர் பிரச்சனைகளுக்கு அதிகமாக முகம் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் வழங்குவதற்காக எட்டு மில்லியன் ரூபா நிதி அரசிடம் கோரியிருக்கின்ற போதும்இ இதுவரை இரண்டு மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் ஏனைய நிதிகள் விரைவில் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!