வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் ஒருவரின் குடும்பத்திற்கு, புலம்பெயர் உறவினர் ஒருவரின் நிதிப்பங்களிப்பில், வட்டக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் வாழ்வாதார உதவி வழங்கியுள்ளது.
5ம் வட்டாரம் இரணைப்பாலை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சுவாக்கின்பிள்ளை செபாஸ்ரியாம்பிள்ளை குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு மீன்பிடி தொழிலுக்கான பைவர் வள்ளம் ஒன்றினை வட்டக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் வழங்கியுள்ளது.
நேற்று புதுமாத்தளன் கடற்கரையில் வைத்து, குறித்த குடும்பத்திற்கு 75 ஆயிரம் ரூபா பெறுமதியான பைவர் வள்ளம் ஒன்றினை வட்டு இந்து வாலிபர் சங்கம் வழங்கியுள்ளது.
இதற்கான நிதியினை புலம்பெயர் உறவினர் ஒருவர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (சி)